Tuesday, 21 February 2012

வகுப்புக்கு வெளியே வாங்க - 1

ன்பு மாணவர்களுக்கு, 
             வணக்கம். இன்றைய நாட்களில் உங்களில் பலர் இணைய தளத்தைப் பயன்படுத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில், உண்மையான படிப்பு என்பது வகுப்பறைக்குள் மட்டும் அல்ல.  கல்வி, அறிவியல், சமூகம், மானுடம் என்று எதுவாகவும் இருக்கட்டும். அது வெளியேதான் அதிகமாக உள்ளது.  இங்கு  'வெளியே' என்று நான் சொல்வதை வகுப்பறைக்குள் விடாப்பிடியாகக் கொண்டு வர முயற்சிக்கும் போதெல்லாம் பாடத்திட்டமும், தேர்வுமுறையும் மனதிற்குள் லேசாய் அச்சுருத்தும். அதனால்தான் சில செய்திகளை இதன் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இணைய தளத்தைப் பயன்படுத்தும் பல இளையோர் எதைப் படிப்பது,  எதை  விடுப்பது என்று அறியாமல் தவறுகின்றனர். ஏனெனில் வகுப்பறையில் ஆரம்பத்தில் 'இணைய தளம்' என்று சொன்னவுடன் பலமாணவர்கள் மெல்லிய நகைப்பு செய்ததில் இருந்து நான் புரிந்து கொண்டது அது. எனவே சில இணைய தளமுகவரிகளை இங்கு அறிமுகம் செய்கிறேன்.இவை உங்களுக்கு, உங்களின் கற்றலுக்கு, கற்றலின் தேடலுக்குப் பயன் தரும். இதை நான் முதலில் சொன்ன 'வெளியே' என்ற வகையில் எடுத்துக்கொள்ளுங்கள்.

தினமும் செய்திகளை அறிந்து கொள்ள கீழுள்ளதளங்களும்  உதவியாய் இருக்கும்.
                         http://www.bbc.co.uk/tamil/
                         http://www.inneram.com/
செய்திகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், இலக்கியம் போன்றவைகள்
                            http://puthu.thinnai.com/
                        http://solvanam.com/
                        http://www.jeyamohan.in/
                        http://www.badriseshadri.in/
                        http://kalaiy.blogspot.in/
அறிவியல் சார்ந்தவைகளுக்கு 
                                http://www.ommachi.net/
வரலாறு, பாரம்பரியம் போன்றவற்றிக்கு 
                        http://varalaaru.com/
                        http://blog.tamilheritage.in/
                        http://www.tamilheritage.org/
பல்சுவை சார்ந்த தேடலுக்கு
                        http://www.keetru.com/
                        http://kricons.blogspot.in 
                        http://pkp.blogspot.in/
தமிழ் நாடு அரசு பாடப்  புத்தகங்களைக் காண 
                        http://www.textbooksonline.tn.nic.in 
தமிழ் நாடு அரசு - X, XIIம் வகுப்பு பழைய வினாத் தாள்களைப் பார்க்க 
                        http://dge.tn.gov.in/question_bank.htm
பட விளக்கங்களுடன் கூடிய ஆங்கில அகராதி 
                        http://visual.merriam-webster.com/  
க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம், அகராதி, வெளியீடுகள் 
                        http://www.crea.in/
தமிழ் இலக்கியம்,ஆய்வு, கட்டுரைகள் தொடர்பான நூல்களைப் படிக்க, டவுன்லோடு செய்ய  
                        http://www.openreadingroom.com/
கணிப்பொறி மற்றும் மென்பொருள் தொடர்பான செய்திகளை அறிய,டவுன்லோடு செய்ய   
                        http://ponmalars.blogspot.in/
நம் முன்னாள் மாணவர்களின் பிளாக்குகள் 
                        http://vidhaanam.wordpress.com/   
                        http://subramaniapandi.blogspot.in/
                        http://msattanathan.wordpress.com/
இப்போதைக்கு இவற்றைப் படித்துப் பாருங்களேன்.
   
    

No comments:

Post a Comment