Thursday 29 December 2011

விளையும் பயிர் முளையிலே தெரியாது!

  "நானொரு மந்தமான குழந்தை என்பது உண்மைதான். ஆசிரியர் சொல்வது எதுவுமே எனக்குப் புரிவதில்லை. எனக்கு எது சந்தோசம் தருமோ அதை மட்டுமே அப்போது நான் செய்வேன். இதனால் மற்ற குழந்தைகளிடமிருந்து என்னைப் பிரித்து என் நாற்காலியை வகுப்பில் ஒரு ஓரமாய்ப் போட்டனர். நான் சிறப்புப் பயிற்சி பெற வேண்டிய குழந்தையாக மாறினேன். ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில், இடையிடையே,"ஒரு வேளை இது அகிராவுக்குப் புரியாமல் போகலாம்... ... அல்லது அகிராவால் இதைச் செய்யமுடியாது." என்று சொல்வார். ஆசிரியர் இப்படிச் சொல்லும் போதெல்லாம் மற்ற குழந்தைகள் என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். அப்போது என் மனசில் சுரந்த கசப்பை அவர்கள் யாரும் புரிந்துகொண்டதே இல்லை. ஒரு வகையில் ஆசிரியர் சொல்வதிலும் உண்மை இருந்தது. எனக்கு எந்தப் பாடமும் புரியவில்லை. அது என் மூளைக்குத் திணறலையே தந்தது."
                   - உலகத் திரைப்பட மேதை என்று உலகத்தவரால் போற்றப்படும் ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசாவா தன்னுடைய சுய சரிதையில் இவ்வாறு  கூறி இருக்கிறார்.    (நூல் :அகிரா குரோசாவா, மொழி பெயர்ப்பு :இளையபாரதி, மு.நடராஜன்  பக். 33 )

             "பாரதியாருக்குப் பள்ளிப் படிப்பான மதி பற்றிவிடவில்லை. ஏழெட்டு வயதிலேயே மோகனமான பகற்கனவுகள் காண்பதிலும் சிங்காரரஸமுள்ள கவிகள் இயற்றுவதிலும் பிரியம் கொண்டவர். அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து அப்படியே மனப்பாடம்.
              பாரதியாருக்குக்   குழந்தைப் பருவத்தில் ரொம்ப மறதிஅதிகம். பள்ளிக்கு எனத் தந்தையார் வாங்கிக் கொடுத்த கற்பலகை, குச்சி, புஸ்தகங்கள்  முதலியவற்றை யார் வீட்டுத் திண்ணைகளிலாவது வைத்துவிட்டுக்
குளத்தங்கரைக்குச் சென்று, இயற்கைக் காட்சிகளில் ஈடுபட்டு, ஆனந்தமாக ரஸி த்துக்கொண்டிருந்து, வீடு திரும்புவார்.
               அவரது சிற்றன்னை "புஸ்தகம், ஸ்லேட் எங்கே என்று கேட்டபின்தான் அவருக்குத் தாம் பள்ளிக்குப் போகாமல் தெருவில் சுற்றிய ஞாபகம் வரும். பின்பு அந்த அம்மையார் சின்னசாமி அய்யர் கோபித்துக்கொள்வார் என்று பயந்து தாமே கடைக்குச் சென்று ஸ்லேட், புஸ்தகங்களை வாங்கிக் கொடுத்து, சாப்பாடு போட்டு, வீட்டுக்கு அனுப்புவார். மகன் யோக்கியமாகப் பள்ளி சென்று வருகிறான் என்று தந்தை உள்ளூர மகிழ்ச்சியோடிருப்பார்."
            - பாரதியைப் பற்றி அவர் மனைவி செல்லம்மா பாரதியார் எழுதிய வரிகள் இவை. (நூல் :  பாரதியார் சரித்திரம்,செல்லம்மா பாரதியார் பக்.10,11) 

Sunday 25 December 2011

கோபுர அர்ச்சிப்பு விழா

         கழுகுமலை தூய லூர்தன்னை ஆலய கோபுர அர்ச்சிப்பு விழா நேற்று மாலை  நடை பெற்றது.  அதில் கழுகுமலையை சார்ந்த அனைத்து சமுதாயத்தினரும், சமயத்தினரும் கலந்துகொண்டனர்.

Photo : P.Ranjit