Friday 3 May 2013

முன் மாதிரி விஷயம்!


இரத்தத்தில் திருமுழுக்கு, கழுகுமலையில் ஒரு விடுதலைப் பயணம் நூல்களை எழுதிய தந்தை ஜார்ஜ் அவர்களை நேரில் சந்தித்து அவர்களைக் குறித்த விபரங்களை சேகரிக்க நினைத்தேன். அதற்காக, அவர்கள் தற்போது பணியாற்றும் கொடை ரோடு அருகிலுள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்திற்குச் சென்றிருந்தேன். எதற்காக வருகிறேன் என்பதையும் முன்கூட்டியே தெரியப்படுத்தி இருந்தேன். நான் நேரில் சென்ற போது, அவர்கள் எனக்காக எழுதித் தயாராக வைத்திருந்த குறிப்புகள் கண்டு வியந்தேன். அவர்கள் வாழ்க்கையைக் காலக்கோடு போல எழுதி வரிசைப்படுத்தி இருந்தார்கள். எந்தவொரு விஷயத்திலும் நாம் எப்படி முன் தயாரிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு இது நல்ல முன் மாதிரி. அதை அப்படியே கீழே தந்துள்ளேன்.

வாழ்க்கைக் குறிப்புகள்:

23.04.1926  - தந்தை ர.ஜார்ஜ் அவர்கள் பிறந்த நாள்.

1932  -  1937  புனித மரியன்னை ஆரம்பப் பள்ளி, கழுகுமலை.

1937  -  1948 (6 முதல் பி.ஏ., வகுப்பு முடிய) சவேரியார் பள்ளி, பாளையங்கோட்டை.
(கழுகுமலையில் பி.ஏ., பட்டம் பெற்ற இரண்டாம் நபர் இவர். முதல் நபர் மாசிலாமணி ஆசிரியர் மகன் ஸ்தனிஸ்லாஸ் ஆவார்.)

07.06.1948  -  இயேசு சபை துறவறப் பயிற்சிக் கல்லூரியில் சேருதல் (கொடைக்கானல்)

16.06.1950  -  துறவறம் மேற்கொள்ளுதல் (மும்பை)

1950  -  1952  இலத்தீன் மொழி, ஆங்கில இலக்கியம் பயிலுதல் (மும்பை)

1952  -  1953  மெய்யியல் கற்றல் (பூனே)

1953  -  1955  மெய்யியல் படிப்பு தொடர்ச்சி (கொடைக்கானல்)

1955  -  1957  ஆசிரியர் & விடுதிக் காப்பாளர்
புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளி, மதுரை.

1957  - 1961  இறையியல் படிப்பு (பூனே)

24.03.1960  குருப்பட்டம் (பூனே)

1961  -  1962  புனித சவேரியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பி.எட். கற்றல். (பாளை)

1962  -  1963  இயேசு சபையில் இறுதிப் பயிற்சி (கொடைக்கானல்)

1963  -  1966  ஆசிரியர், திருச்சி புனித வளனார் உயர்நிலைப் பள்ளி,
கத்தோலிக்க விடுதிகளின் பொதுக் கண்காணிப்பாளர்,
கல்லூரி விளையாட்டுக் கழகத் தலைவர்.

1966  -  1969  தலைமையாசிரியர், புனித அருளானந்தர் உயர்நிலைப் பள்ளி, ஓரியூர்.

1969  -  1972  தலைமையாசிரியர் & இல்லத் தலைவர்,
கார்மல் உயர்நிலைப்பள்ளி, நாகர்கோவில்.

1972  -  1975  துணை முதல்வர், புனித வளனார் கல்லூரி, திருச்சி;
கல்லூரி விடுதிக் கண்காணிப்பாளர்; கல்லூரி விளையாட்டுக் கழகத் தலைவர்.

1975  -  1976  துணை முதல்வர், புனித அருளானந்தர் கல்லூரி, கருமாத்தூர். கல்லூரி விடுதிக் கண்காணிப்பாளர்; கல்லூரி விளையாட்டுக் கழகத் தலைவர்.

1976  -  1980  ஆசிரியர் & விடுதிக் கண்காணிப்பாளர், புனித மரியன்னை உயர்நிலை பள்ளி, மதுரை.

1980  -  1981  தலைவர், லொயோலா தொழிற்பயிற்சிப் பள்ளி, மதுரை.

1981  -  1984  முதல் தலைமையாசிரியர், புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி, கொசவபட்டி.

1984 மே - ஆசிரியர் பணி ஓய்வு

1984  -  1997  வெளியீட்டு மேலாளர், வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்.

1997  -  2000  நிதிப் பொறுப்பாளர், புனித வளனார் கல்லூரி, திருச்சி.

2000  -  2001  இளைப்பாறுதல்

2001  -  2006  விடுதிக் கண்காணிப்பாளர், லொயோலா தொழிற்பயிற்சிப் பள்ளி, மதுரை.

2006  -  2009  உதவி மேற்பார்வையாளர், வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்.

2009 முதல் - விடுதிப் பணியாளர், புனித ஜோசப் கருணை இல்லம், மெட்டூர் கேட்.
* * *