Friday 9 August 2013

வளமாக வாழ நெஞ்சில் நிறுத்துவோம்!

அருட்சகோ.மரியண்ணன் அவர்கள், கழுகுமலை ஆர்.சி.சூசை மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது, அவர் எழுப்பிய பள்ளிப் பாதுகாப்புச் சுவற்றில் பார்ப்போர் மனம் பண்படும்படியான பொன்மொழிகளைத் தொகுத்து எழுதினார். தமிழ் நீதிநூல்களில் இனியவை நாற்பது, இன்னா நாற்பது என்பன போல இதனை அண்ணன் மொழி 130” என்றும் கூறலாம். வளமாக வாழ நினைப்போர் இதை நெஞ்சில் நிறுத்திக் கொள்ளலாம்.
 
1.         அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
2.         அகந்தூய்மை வாய்மையால் அமையும்.
3.         அகிலம் போற்ற அன்பைப் போற்று.
4.         அதிர்ஷ்டத்தை அல்ல உழைப்பை நம்பு!
5.         அமைதி இறைவனது குடிசை.
6.         அறியாமை அகல ஆழ்ந்துபடி.
7.         அறிவு அனுபவத்தின் வெகுமதி.
8.         அறிவுக்கு அளவுகோல் மதிப்பெண் மட்டுமல்ல.
9.         அன்பிருக்குமிடத்தில் மன்னிப்பு வழிந்தோடும்.
10.      அன்புள்ள இதயம் ஆனந்தத்தின் ஊற்று.
11.      அன்பே வாழ்வின் ஆணிவேர்.
12.      ஆசை முடிந்தால் தான் அமைதி.
13.      ஆழமான அன்பு அச்சத்தை அகற்றும்.
14.      ஆற்றலை விட ஆர்வமே வெற்றிக்கு ஆதாரம்.
15.      இணைந்து திட்டமிடுவோம்; முனைந்து செயல்படுவோம்.
16.      இறைஞானம் பெற சிலுவையனுபவம் தேவை.
17.      இறைவன் அற்புதங்களை மனிதன் வழியாகச் செய்கிறார்.
18.      இறைவன் துணையில்லாதவன் ஏழை.
19.      இறைவனின் இல்ல அடித்தளம் அன்பு.
20.      இறைவனின் மறு உருவம் குழந்தைகள்.
21.      உண்மைக்காக எதையும் துறக்கத் தயங்காதே!
22.      உண்மைதான் மனிதனின் மாண்பு.
23.      உண்மையே உன்னை உயர்த்தும்.
24.      உணவு கொடுப்பதும் உயிர் கொடுப்பதே!
25.      உயர்ந்த சிந்தனை உன்னை உயர்த்தும்.
26.      உயர்வோ தாழ்வோ நிதானம் தேவை.
27.      உருகும் மெழுகே ஒளி தரும்.
28.      உலகிலிருப்பது பற்றாக்குறையல்ல; பகிராக்குறை!
29.      உழவு செழிக்க; உலகம் செழிக்கும்!
30.      உழைப்பில்லையேல் செழிப்பில்லை.
31.      உழைப்பின் வேர்கள் கசப்பானாலும் கனி இனிக்கும்.
32.      உழைப்பே உண்மை சுதந்திரம்.
33.      உழைப்பே உயர்வு.
34.      உள்ளத்தின் விளக்கு சிந்தனை.
35.      உள்ளத்து ஊனமே ஆபத்தானது.
36.      உள்ளுக்குள் பயந்தால் உலகில் வாழ்வேது.
37.      உளி விழுவது வலியென அழும் கற்கள் சிற்பங்களாக!
38.      உற்சாகம் வாழ்க்கைக்கு உரம்!
39.      உற்ற நட்பே உயிருக்கு அமிர்தம்.
40.      உறவுப் பூக்கள் வாழ்வின் வேர்கள்.
41.      உறவு வாழ்வை அழகுபடுத்தும்.
42.      உன் பிரசன்னம் உணரப்படட்டும்.
43.      உன்னைப்போல் பிறரையும் நேசி.
44.      உன்னைப்போன்று வேறொருவன் உலகில் இல்லை.
45.      உன்னையே நீ அறிந்துகொள்.
46.      உனக்கென்று தனிச்சிறப்பு உண்டு.
47.      எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார் இயேசு.
48.      எதிர்ப்பின்றி வளர்ச்சியில்லை.
49.      எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்.
50.      எறும்பு ஊறக் கல்லும் தேயும்.
51.      ஒதுக்குவதும் ஒடுக்குவதும் ஒடுங்குவதும் பாவம்.
52.      ஒருவரைத் தனிமைப்படுத்துவது சமூகப்பாவம்.
53.      ஒழுக்கமே கடவுளின் முதல் கட்டளை.
54.      ஒளியாகவும் வழியாகவும் வாழ்வோம்.
55.      ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
56.      கடமையைச் செய்து உரிமையைப் பெறு.
57.      கடமையைச் செய்து விட்டு கடவுளை நினை.
58.      கடவுள் ஆள் பார்த்து செய்பவர் அல்லர்.
59.      கடவுள் நம்மை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை.
60.      கடின உழைப்பே தெய்வ வழிபாடு.
61.      கல்வியே கவலைக்கு மாற்று வழி.
62.      கல்வி வாழ்வின் உயிர்மூச்சு.
63.      கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்.
64.      கற்றபின் நிற்க அதற்குத் தக.
65.      கன்னங்கள் நனைந்தாலும் கருத்துக்கள் சிறக்கட்டும்.
66.      கனவு வசப்பட வேண்டும்.
67.      குழந்தை வருமானம் குடும்ப அவமானம்.
68.      குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
69.      கொடுப்பதில்தான் இன்பம்; பெறுவதிலல்ல.
70.      செபிக்காத மனிதன் வேரில்லாத மரம்.
71.      செய்யும் தொழிலே தெய்வம்.
72.      செயலாக்கம் பெற்ற அறிவுதான் ஞானம்.
73.      செல்வம் என்பது சிந்தையின் நிறைவு.
74.      சிக்கனம் வாழ்வை சிறக்கச் செய்யும்.
75.      சிந்தனையே செயலின் அடித்தளம்.
76.      சுடும்வரை நெருப்பு; போராடும்வரை மனிதன்.
77.      சுத்தம் சுகம் தரும்.
78.      சுறுசுறுப்பு எல்லாவற்றையும் எளிதாக்கும்.
79.      சொற்கள் நீர்க்குமிழிகள், செயல்கள் தங்கத்துண்டுகள்.
80.      தவறை ஏற்கும் தைரியம் சிறந்தது.
81.      தன்னடக்கம் நல்ல வலிமை.
82.      தன்னை ஏற்றுக் கொள்பவன் பிறரையும் ஏற்றுக்கொள்கிறான்.
83.      தன்னை நம்புகிறவன் தலைவனாகிறான்.
84.      தாழ்ச்சி இல்லையேல் தடுமாறுவாய்.
85.      திட்டமில்லா செயல் நஷ்டமே.
86.      துணிந்து விட்டால் தூண்கூடத் துரும்பு.
87.      துணிவு உடலையும் உள்ளத்தையும் வலுவாக்கும்.
88.      துன்பம் எல்லோரையும் திருத்திவிடும்.
89.      தொண்டு தூயமனத்தின் செயல்பாடு.
90.      நண்பனை இரகசியமாகத் திருத்து.
91.      நம்பிக்கை தரும் வலிமைக்கு ஈடு இணை இல்லை.
92.      நம்பிக்கையே செயலின் வழித்தடம்.
93.      நல்ல நண்பன் உறுதியான நங்கூரம்.
94.      நல்ல நூல்களே சிறந்த நண்பர்கள்.
95.      நல்லெண்ணம் நற்பலன் தரும்.
96.      நற்செயல்கள் ஒளிபோல் சுடர்விட்டுத் திகழும்.
97.      நன்மை செய்ய மனம் தளரவேண்டாம்.
98.      நன்றே செய்; இன்றே செய்.
99.      நாட்டுப்பற்று இல்லாதவன் நடைபிணம்.
100.  நாம் எதுவாக விரும்புகிறோமோ அதுவாக மாறி விடுவோம்.
101.  நிறைகள் நீங்கின் குறைகள் குவியும்.
102.  நீ இங்கு சரித்திரம் படிக்க மட்டுமல்ல; படைக்கவும் தான்.
103.  நீதியில்லா அன்பு போலித்தனமானது.
104.  நீங்களே கடவுளின் ஆலயம்.
105.  நீயே அமைதி குடியிருக்கும் விதை.
106.  நீயே உனக்கு நண்பனும் பகைவனும்.
107.  நோக்கு மாற நோக்கமும் மாறும்.
108.  பொதுப்பணி செய்வதில் போட்டி இருக்கட்டும்.
109.  மக்கள் வழிகாட்டிகள்; சமுதாயத் திசைகாட்டிகள்.
110.  மரங்கள் பூமித்தாயின் நுரையீரல்கள்.
111.  மன்னிப்பதில் மனம் தெளிவடைகிறது.
112.  மன்னிப்பதே மாபெரும் தண்டனை.
113.  மனந்திரும்பினால் மனிதம் திரும்பும்.
114.  மனவுறுதி மலைகளையும் தகர்த்தெறியும்.
115.  மனிதம் எங்கோ, தெய்வம் அங்கே!
116.  மனிதனின் முழுமை; இறைவனின் மகிமை.
117.  மாசகற்ற மரம் வளர்ப்போம்.
118.  மாற்றம் ஒன்றே மாறாத் தத்துவம்.
119.  முடியாதது முயலாதது மட்டுமே!
120.  முடியாதென்பது முட்டாள்களின் தத்துவம்.
121.  மூட நம்பிக்கைக்கு மருந்தில்லை.
122.  யாதும் ஊரே யாவரும் கேளிர்.
123.  வளராத நாட்கள் வாழாத நாட்களே.
124.  விரும்பியது அமையாவிட்டால் அமைந்ததை விரும்பு.
125.  விழிப்புணர்வே சமுதாய வளர்ச்சியின் அடித்தளம்.
126.  விளக்கின் ஒளி விளக்குக்கல்ல.
127.  வினாக்களின்றி விடுதலையில்லை.
128.  வீழ்வதைவிட வீழ்ந்து கிடப்பதே வெட்கம்.
129.  வெற்றிக்கு ஏணி மனவுறுதி.
130.  வெறுங்கை மூடத்தனம், விரல்கள் மூலதனம்.
* * *