Saturday 28 July 2012

கணிப்பொறியில் அலகிடுதல்!


பெங்களூரிலிருந்து கடந்த முறை கழுகுமலைக்கு ரஞ்சித் வரும் போது, கணிப்பொறித் தமிழ் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது, கணிப்பொறி மென்பொருள் வழி தமிழிற்கு ஏதாவது செய்ய வேண்டும். குறிப்பாக, கணக்கு போல இருக்கும் புணர்ச்சி விதியை மென்பொருள் கணக்கீட்டிற்குள் கொண்டு வர முடியுமா? என்றான். முடியும்.என்றேன்.
தொடர்ந்து,புணர்ச்சியில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் விதிகளுக்கு உடன்படாதவைகளும் உண்டு. அவற்றிக்குத் தீர்வு புறனடையில் கூறப்படும். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், முதலிலேயே பெரிய ஒன்றை எடுத்து, ஏதோ ஒரு சிறு சிக்கல் ஏற்படும் போது, நம் ஆர்வமும் தடைபட்டுவிடக் கூடாது. எனவே, முதல் முயற்சியாக, குறைந்த வரையறைகளே உள்ள திருக்குறளுக்கான அலகிடுதலை செய்து பார்த்தால் என்ன? என்றேன். அதுவும் சரிதான் என்றவன், பள்ளியில் படித்ததை மீண்டும் கேட்டு குறிப்பெடுத்துச் சென்றான்.

இம்முறை வரும் போது, அலகிடுதலுக்கான மென்பொருளை மிக அழகாக, நேர்த்தியாக எழுதி வடிவமைத்துக் கொண்டு வந்தவன், என் வீட்டிலுள்ள கணிப்பொறியில் அதை இன்ஸ்டால் செய்து இயக்கிக் காண்பித்தான். பிரமாதம்! திருக்குறளை டைப் செய்து அலகிடவும் கட்டத்தை கிளிக் செய்தால் போதும். அடுத்த நொடி, குறளிலுள்ள ஏழு சீர்களும் சீர், அசை, வாய்ப்பாடு என்ற முறையே அலகிடப்பட்டு திரையில் தோன்றியது. வியந்து போனேன்.
என்னையும் ஒரு திருக்குறளை டைப் செய்து பார்க்கச் சொன்னான். டைப் செய்து கிளிக் செய்தேன். அலகிடப்பட்ட விடை அழகாக வந்தது. ஒவ்வொரு சீரையும் அசை பிரித்து, அதன் அருகிலேயே அதற்கான குறில், நெடில் குறிப்பும் இடம் பெற்று தெளிவுறத் தோன்றியது. இதற்காக, மூன்று விதமான நிரல் மொழியைப் பயன்படுத்தியதாகக் கூறினான்.
இதைக் காணும் மாணவர்களுக்கு தமிழைக் கற்பதில் ஆர்வம் வருவது மட்டுமின்றி, தமிழை இவ்வாறு புது வடிவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்ற அவாவும் கண்டிப்பாகப் பிறக்கும். ஏடுகளில் தூங்கும் தமிழை - கணிபொறியில் கொண்டு செல்வதால் தமிழின் வயதும், வாழ்வும் நீளும் என்பதில் ஐயமில்லை. அதே வேளையில் இன்றைய இளையோர் இதை செய்வது மிகுந்த வரவேற்புக்குரியது.

ரஞ்சித்தின் இந்த வெற்றி, புணர்ச்சி விதி முயற்சிக்குக் கம்பளம் விரித்து விட்டது!

4 comments:

  1. பிரமாதம் சார் !!!
    வாழ்த்துக்கள் ரஞ்சித் !!!
    இந்த அரிய முயற்சியை இத்தோடு விடாமல் , மிக பெரியதாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பது எனது வேண்டுகோள் .
    தமிழ் -கணினி சார்ந்த ஆய்வில் , எனது சிந்தனைக்குப் பட்ட சிலவற்றை , விரைவில் நானும் கணினியில் கொண்டு வருகிறேன்.
    இது போன்ற கணினி சார்ந்த இலக்கியம் , தமிழ் மென்பொருள் படைப்புப் பெருக்கின் வாயிலாக , வருங்காலத்தில் 'கழுகுமலை' நவீன தமிழ் வளர்ச்சிக்கு ஒரு தமிழ்ச்சங்கமாய் விளங்க வேண்டும்.

    வாழ்த்துக்கள் பற்பல !!!

    ReplyDelete
  2. இதே போன்று பாடலை , மேலும் சில வசதிகளோடு பிரித்து பார்ப்பதற்கு ஒரு சுட்டி

    http://www.virtualvinodh.com/avalokitam

    ReplyDelete
  3. இணைப்பிற்கு நன்றி சட்டநாதன்.

    தமிழ் unicode-ஐ மென்பொருள் நிரலில் கையாள்வது எவ்வளவு கடினமான அதே நேரத்தில் சுகமான அனுபவம் என்பது இதைச் செய்யும் போது நான் கண்ட உண்மை. வெண்பா analyzerதான் என்னுடைய அடுத்த முயற்சியாக இருந்தது. நல்ல வேளை, ஏற்கனவே அதற்கான செயலி இருக்கிறது. இனி வேறு ஏதாவதில் கவனம் செலுத்தலாம். ஏனென்றால், reinventing the wheel என்பது மென்பொருள் துறையில் மிகப் பெரிய பாவச் செயல் :-)

    தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவும்.

    ReplyDelete
  4. இதை நான் செய்ய install முடியுமா

    ReplyDelete